Ads (728x90)

சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் தொடர்பான கடனை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் முடிவு பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளிக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகேவால் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிதியமைச்சர், நிதியமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் அந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் தொடர்பான கடன் 05 முதல் 07 வீதத்திற்கு இடைப்பட்ட வட்டி விகிதத்தில் பெறப்பட்டதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் 8.2% சதவீதத்தை அரசு உயர்த்தி பின்னர் 7.4% ஆக குறைத்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சர்வதேச இறையாண்மை பத்திரங்களுக்காக செலுத்த வேண்டிய 16.4 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் 19.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்து இலங்கை மக்கள் மீது பாரிய பொருளாதார சுமையை ஏற்படுத்தியுள்ளதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கடன்கள் அமெரிக்க சட்டத்தின் கீழ் பெறப்பட்டாலும் அந்த கடனில் ஒரு பகுதியை குறைத்துக்கொள்ள வாய்ப்பு இருந்த போதிலும் அரசாங்கம் அதனை கவனத்தில் கொள்ளாமல் வட்டி விகிதத்தை அதிகரித்து இந்நாட்டு மக்களுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget