Ads (728x90)

2024 ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறார்.

20 மாவட்டங்களின் தபால் மூல வாக்குகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 531,341 வாக்குகள் (52.67) அனுரகுமார திசநாயக்க பெற்றுள்ளார்.

18 மாவட்டங்களில் அனுரகுமார திசநாயக்கவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச 219,835 (21.79) வாக்குகளையும், சுயேட்சை வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க 191,618 (18.99) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தளை, மாத்தறை, மொனராகலை, பொலன்னறுவை, இரத்தினபுரி, திருகோணமலை, அநுராதபுரம், கேகாலை, திகாமடுல்ல, குருநாகல், கம்பகா, நுவரெலியா, புத்தளம், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய 17 மாவட்டங்களில் அனுரகுமார வெற்றி பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ரணில் விக்கிரமசிங்கவும், வன்னி மாவட்டத்தில் சஜித் பிரேமதாசவும் வெற்றி பெற்றுள்ளனர்.

அனுரகுமார திசநாயக்க வெற்றி பெற்ற மாவட்டங்கள்:

இரத்தினபுரி மாவட்டம் – 60.83%
திருகோணமலை மாவட்டம் - 37.89%
காலி மாவட்டம் - 64.5%
மொனராகலை மாவட்டம் - 58.57%
ஹம்பாந்தோட்டை மாவட்டம் - 67.2%
பொலன்னறுவை மாவட்டம் - 61.26%
கொழும்பு மாவட்டம் – 61.02%
மாத்தளை மாவட்டம் – 58.23%
மாத்தறை மாவட்டம் – 65.92%
அநுராதபுரம் மாவட்டம் – 61.23%
கேகாலை மாவட்டம் – 59.17% 
திகாமடுல்ல மாவட்டம் – 42.66%
குருநாகல் மாவட்டம் – 62.5%
கம்பகா மாவட்டம் – 65.68%
நுவரெலியா மாவட்டம் – 47.15%
புத்தளம் மாவட்டம் – 59.72%
கண்டி மாவட்டம் – 60.14%
கழுத்துறை மாவட்டம் – 60.04%

Post a Comment

Recent News

Recent Posts Widget