இலங்கையின் பொருளாதார மீட்சியை வரவேற்பதாக அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளது.
நிலங்களை மீள ஒப்படைப்பதை தொடருமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அமெரிக்கா, நிலங்களை கைப்பற்றுவதை நிறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வது குறித்து கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா நீண்டகாலமாக காணப்படும் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதல் நல்லிணக்கத்திற்கான தடையாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.
பொறுப்புக்கூறலிற்கு தீர்வை காண்பதற்கு பக்கச்சார்பற்ற வெளிப்படையான அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறைக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், வெளிப்புற ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறையையும் நிராகரிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை மீண்டும் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சம்மதம் இன்றி அவை நிறைவேற்றப்பட்டமையினால் அவற்றை நிராகரிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.
Post a Comment