Ads (728x90)

இராஜாங்க அமைச்சர்கள் மேலும் ஐவரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

அதன்படி மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா சமன்மலீ குமாரசிங்க, நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ. சானக ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47(3) (அ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னரும் நான்கு இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி பதவி நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget