பாலைவனம் என்றால் வறண்ட நிலமும், தண்ணீரற்ற பகுதியும்தான். கண்ணிற்கு எட்டும் தூரமெல்லாம் கானல் நீர்தான். மேலும் பாலைவனம் என்றாலே நமது நினைவுக்கு வருவது சஹாரா பாலைவனம் தான். உலகின் மிகப்பெரிய பாலைவனம் என்றால் அது சஹாரா பாலைவனம் தான்.
இந்த பாலைவனத்தில் மிக கொடிய விஷமுள்ள உயிரினங்கள் உள்ளன. மணல் திட்டுகள் மிகவும் சூடாக இருக்கும். இந்த பாலைவனத்தில் மழைப் பொழிவு என்பது மிகவும் அரிதான விஷயம்.
சஹாரா என்றாலே வறட்சி, மணற்பரப்பு, வெப்பம் மட்டுமே நினைவுக்கு வரும். இந்நிலையில் இந்த ஆண்டு அங்குள்ள ஏரி ஒன்று நிரம்பி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில் அங்குள்ள இரிக்கி என்ற ஏரி நிரம்பி காணப்படுகிறது. 50 ஆண்டுகளாக வற்றியிருந்த ஏரி தற்போது நீர் நிரம்பி காணப்படுகிறது.
பாலைவனத்தில் தேங்கிய வெள்ள நீர், ஆங்காங்கே குட்டைகளாக காட்சி அளிக்கும் படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நாசாவால் எடுக்கப்பட்ட படங்களும் வெளியாகி காண்போரை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
Post a Comment