இக்கையளிப்பு நிகழ்வுகளில் இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை நிலை பேண்தகு சக்தி அதிகார சபை ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கையில் உள்ள 5,000 மத ஸ்தலங்களில் கூரையில் பொருத்தக்கூடிய சூரிய கல மின்சக்தி தொகுதிகளை அமைப்பதனை இலக்காகக் கொண்டு இந்தியாவால் ஒதுக்கப்பட்ட 17 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கையின் பசுமை சக்தி பாவனையினை அதிகரித்தல் மற்றும் மத ஸ்தலங்களின் மின்சக்தி செலவீனத்தை குறைத்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பௌத்தம், இந்து சமயம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய நான்கு மத ஸ்ங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாரிய மதஸ்தலங்களை உள்ளடக்கியதாக இலங்கையின் 9 மாகாணங்களிலும் உள்ள 25 மாவட்டங்களிலும் இந்த 5,000 சூரிய கல மின் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன.
இத்திட்டம் அடுத்த வருட முற்பகுதியில் நிறைவு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியின் விநியோகம் மற்றும் பொருத்துதல் ஆகியவற்றுக்கு மேலதிகமாக நீண்டகால வினைத்திறன் மிக்க செயற்பாடு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றினை உறுதிப்படுத்தும் நோக்குடன் 5 வருட காலத்துக்கான பராமரிப்பினையும் இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளது.
Post a Comment