Ads (728x90)

2024 ஆம் ஆண்டுக்கான 13 ஆவது மகளிர் ஆசிய வலைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் சிங்கப்பூர் அணி 67-64 என்ற வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவின் பெங்களூரில் உள்ள கோரமங்களா விளையாட்டு மைதானத்தில் நேற்று குறித்த இறுதிப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் நடப்புச் சம்பியனான இலங்கை அணி ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடியபோதிலும் இறுதி நிமிடங்களில் சிங்கப்பூர் அணியிடம் தோல்வியைத் தழுவியது.

அந்தவகையில் இப்போட்டியின் புள்ளிப் பட்டியலில் சிங்கப்பூர் அணி முதலாவது இடத்திலும், இலங்கை அணி இரண்டாவது இடத்திலும் மலேசியா அணி மூன்றாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget