Ads (728x90)


குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சீன அரசாங்கத்தினால் 552 மில்லியன் சீன யுவான் நிதி உதவியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் 1,888 வீடமைப்பு மற்றும் 108 கலைஞர்களுக்கான வீடமைப்பு வேலைத்திட்டத்தின், துணை ஒப்பந்தத்தில் பத்தரமுல்லை செத்சிரிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணத்தறை மற்றும் வீடமைப்பு அமைச்சில் வைத்து கையெழுத்திடப்பட்டது.

பேலியகொடை, தெமட்டகொடை, மொரட்டுவ, மஹரகம ஆகிய பிரதேசங்களில் இந்த வீடமைப்பு வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதுடன், கலைஞர்களுக்கான வீடமைப்புத் திட்டம் கொட்டாவ பிரதேசத்தில்  நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களில் பூர்த்தி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வொப்பந்தத்தில் நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் பேராசிரியர் அனுர கருணாதிலக மற்றும் இலங்கைக்கான சீன நாட்டு தூதுவர் கியூ சன்ஹோன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget