2024 கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தர பரீட்சை இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாகவும், அதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை தினங்களில் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் செய்ய வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை இன்று 25 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்கு 333,185 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 253,390 பாடசாலை பரீட்சாத்திகளும், 79,795 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளடங்குவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 2,312 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், பரீட்சை மத்திய நிலையங்களை ஒருங்கிணைப்பதற்காக நாடு முழுவதும் 319 நிலையங்களும் 32 ஒழுங்குபடுத்தல் மத்திய நிலையங்களின் கீழ் நிறுவப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
Post a Comment