Ads (728x90)

நீங்கள் நீண்ட நாட்கள் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்க விரும்பினால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள். 

அதோடு பழச்சாறுகளையும் அதிகம் குடியுங்கள். பழச்சாறுகளை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால், சரும செல்களின் ஆரோக்கியம் மேம்பட்டு சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது சரும செல்களுக்கு பாதுகாப்பளித்து விரைவில் முதுமைத் தோற்றம் பெறுவதைத் தடுக்கும். மேலும் பீட்ரூட் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தம் செய்து சருமத்திற்கு பொலிவை அளிக்கும்.

கேரட்

கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் மற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இச்சத்துக்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவோடும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்ளும். அதோடு கேரட், சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்களின் தாக்கத்தினால், சரும செல்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பளிக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், இது சருமம் வறட்சியடையாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் வெள்ளரிக்காயில் சிலிகா என்னும் கனிமச்சத்து உள்ளது. இது சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்க உதவும்.

ஆப்பிள்

ஆப்பிளில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளன. இச்சத்துக்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்துக் கொள்ளும். ஆகவே முடிந்தால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

மாதுளை

மாதுளையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சருமத்தில் கொலாஜன் உருவாக்கத்தை ஊக்குவித்து, சருமம் தளர்ந்து சுருக்கமடைவதைத் தாமதப்படுத்த உதவும். முக்கியமாக மாதுளையை ஒருவர் அன்றாடம் சிறிது சாப்பிட்டு வந்தால், உங்கள் முதுமையை நிச்சயம் தள்ளிப் போட முடியும்.

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழங்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இவை முதுமைக்கான அறிகுறிகள் மற்றும் சூரியனால் ஏற்படும் சரும பாதிப்பைத் தடுக்க உதவும். அதோடு இந்த பழங்கள் சரும செல்களில் உள்ள நச்சுக்களை நீக்கி, சருமத்தை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளும்.

இஞ்சி

இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், சருமத்தின் மென்மைத்தன்மை மற்றும் சரும சுத்தத்தை மேம்படுத்தும். அதோடு இஞ்சி உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடை குறையவும் உதவி புரியும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget