2024 ஆம் ஆண்டில் 80 சதவீத பாடசாலைகளுக்கு சீருடைத் துணிகளையும், 2023 ஆம் ஆண்டு இலங்கை மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை சீருடை துணிகளில் 70 வீதத்தையும், நன்கொடையாக சீனா வழங்கியதாகவும், அந்தத் தொகையை 2025 ஆம் ஆண்டில் 100 சதவீதமாக அதிகரிக்க சீனா தீர்மானித்துள்ளதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
வருட இறுதிக்குள் 3 பிரிவுகளின் கீழ் இதனை வழங்க எதிர்பார்ப்பதாகவும் சீனா, இலங்கையின் உண்மையான நண்பனெனவும், நல்லதொரு பங்காளியெனவும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை புதிய யுகத்தை நோக்கி நகர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கெப்பிட்டிபொல தேசிய பாடசாலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த புலமைப்பரிசில் திட்டம் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது இலங்கையில் 20 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்விக்கு உதவும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீனத் தூதுவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Post a Comment