Ads (728x90)

அமெரிக்க மக்கள் தமது அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் நிலையில், இன்றுடன் பிரசார நடவடிக்கைகள் முடிவடைகின்றன. இரு வேட்பாளர்களும் முக்கியமான மாநிலங்களில் தமது பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கமலா ஹரிஸ் பென்சில்வேனியாவில் தமது இறுதி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப் வட கரோலினா மற்றும் பென்சில்வேனியாவில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இன்று மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு பெறுபேறுகளின்படி இருவருக்கும் சம அளவிலான ஆதரவு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் கமலா ஹரிஸ் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக மட்டுமல்லாமல், முதல் கறுப்பின பெண் என்பதுடன் ஆசியாவைச் சேர்ந்த அமெரிக்க ஜனாதிபதியாகவும் வெள்ளை மாளிகைக்குள் நுழைவார்.

அதேபோல டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறும் பட்சத்தில் மறுதேர்தல் முயற்சியில் தோல்வி கண்டிருந்த இவர், வெற்றி பெற்ற ஜனாதிபதியாகவும், குற்றவியல் தண்டனை பெற்ற ஒரு கட்சியின் முதல்வராகவும் இருக்க முடியும்.

புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவர் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி திங்கட்கிழமை கெப்பிட்டல் வளாக மைதானத்தில் பதவி ஏற்பார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget