Ads (728x90)

ஜனாதிபதியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த சந்தேக நபரை நேற்று கைது செய்துள்ளனர்.

38 வயதான குறித்த சந்தேகநபர் அத்துருகிரிய பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 

சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புகைப்படத்தை பயன்படுத்திய சந்தேகநபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெஸ்பேவ நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள இந்த நாணயத்தாள் அச்சிடப்பட்ட திகதியாக கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் திகதியே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் இதுவரை நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்படவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget