வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த சேவை நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நிறுத்தம் செய்யப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில் தமிழக மற்றும் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் இதற்கான முற்பதிவுகள் இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பமாகியிருக்கிறது. மேலும் வாரத்திற்கு ஆறு நாட்கள் இந்த சேவை கிடைக்கும் என்றும், ஒரு முறை சென்று வருவதற்கான போக்குவரத்து கட்டணம் இந்திய மதிப்பில் 35ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Post a Comment