புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் அரசியல்வாதியுமான மன்மோகன் சிங்கின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சமீப காலமாகவே உடல்நலக்குறைவு காரணமாக மன்மோகன் சிங் அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்தார். ஏப்ரல் 2024 இல் ராஜ்யசபா உறுப்பினர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
1932 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்த மன்மோகன் சிங், 1991ஆம் ஆண்டு பிவி நரசிம்ம ராவ் அரசில் நிதியமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது இந்தியாவில் பெரிய அளவில் பொருளாதார கொள்கை மாற்றங்களை ஏற்படுத்தியவர்.
அதற்கு முன்னர் இந்தியா ஏறத்தாழ சோசலிச நாடுகளின் பாணியிலான பொருளாதார கொள்கைகளை பின்பற்றி வந்தது. ஆனால் அதில் ஏராளமான ஊழல்களும், பிரச்னைகளும் இருந்தன. இது நாட்டின் வளர்ச்சியை கடுமையாக பாதித்து பொருளாதார சரிவை ஏற்படுத்தியது.
இந்த பொருளாதார கொள்கைளை மாற்ற வேண்டும் என்பதில் காங்கிரஸ் மிகுந்த முனைப்புடன் இருந்தது. 1991-1996 வரையிலான பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசாங்கத்தில் மன்மோகன் நிதியமைச்சராக பணியாற்றியபோதுதான் புதிய பொருளாதார கொள்கை இந்தியாவில் முதன் முதலாக அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment