Ads (728x90)

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவினால் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன சூரியபெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன், லக்மாலி ஹேமச்சந்திரா ஆகியோர் கோப் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget