உழைக்கும் போது அறிவிடப்படும் வரி ஒரு இலட்சம் என்ற வரையறை மூன்றாம் மீளாய்வின் போது ஒன்றரை இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் ஒன்றரை இலட்சம் மாதாந்தம் சம்பளம் பெறுவோருக்கு 100 வீதம் வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
2 இலட்சம் சம்பளம் பெற்றுக்கொள்ளும் ஒருவருக்கு 71 வீத வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டரை இலட்சம் சம்பளம் பெற்றுக் கொள்ளும் ஒருவருக்கு 61 வீத வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, 3 இலட்சம் சம்பளம் பெறும் ஒருவருக்கு 47 வீத வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
மூன்றரை இலட்சம் சம்பளம் பெற்றுக்கொள்ளும் ஒருவருக்கு 25.5 வீத வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதற்கிணங்க, அதிக வருமானம் பெறும் ஒருவருக்கு குறைந்த நிவாரணமும், குறைந்த சம்பளத்தை பெறும் ஒருவருக்கு அதிக நிவாரணமும் கிடைக்கும் வகையில் உழைக்கும் போது அறவிடும் வரியில் திருத்தம் மேற்கொள்ள இணங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன் தனிநபர் வருமான வரி முதலாம் கட்டம் 5 இலட்சத்தில் இருந்து 10 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தாமதம் இன்றி உர மானியத்தை வழங்குவதற்கான கலந்துரையாடலை ஆரம்பித்து, விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
Post a Comment