Ads (728x90)

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முப்படையினரின் பாதுகாப்பை எதிர்வரும் வாரத்தில் விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மதிப்பீட்டின் படியே பாதுகாப்பு வழங்கப்படும் என பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிக்காக 1,448 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் அமைச்சர் வெளியிட்டார்.

இன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு 60 பொலிஸ் அதிகாரிகளும், 228 முப்படை அதிகாரிகளும் பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 4 இராணுவ அதிகாரிகளும், 60 பொலிஸ் அதிகாரிகளும் மெய்ப்பாதுகாவலர்களாக உள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பாதுகாப்பிற்காக 188 முப்படையினரும், 22 பொலிஸாரும் வழங்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 57 இராணுவத்தினரும், 60 பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு 60 பொலிஸ் உத்தியோகத்தர்களும், ஹேமா பிரேமதாசவுக்கு 10 பொலிஸ் அதிகாரிகளும் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனவே முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முப்படையினரால் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை அடுத்த வாரம் முதல் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு மாத்திரமே வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த பதினொரு மாதங்களில் முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பதற்காக 1,448 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அது பொதுமக்களின் பணத்தை வீணடிக்கும் செயல் எனவும் தெரிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பரிசீலனை செய்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget