ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனைக் சம்மேளன (CPPCC) தேசியக் குழுவின் உப தலைவர் கின் பொயோங் ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தி, புதிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் செயற்பட எதிர்பார்த்திருப்பதாகவும் கின் பொயோங் தெரிவித்தார்.
அதேபோல் நாட்டின் அனர்த்த நிலைமைகளின் போது உதவிகளை வழங்கியமை மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கியமைக்காகவும் நன்றி கூறிய ஜனாதிபதி சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் மத்திய அதிவேக வீதியில் சீனாவிற்கு பொறுப்பான பகுதிகளை நிறைவு செய்ய வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை மையப்படுத்தி விநியோக மத்தியஸ்தானம் மற்றும் நிறுவன வேலைத்திட்டங்களை விரைவாக ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
Post a Comment