Ads (728x90)

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தேசிய பொங்கல் விழா வெகு விமரிசையாக அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தேசிய தைப்பொங்கல் விழாவானது காலை 7.30 மணிக்கு தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் சமய வழிபாடுகளுடன் ஆரம்பமாகி பின்னர் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வரை ஆன்மிக விழிப்புணர்வு நடைப்பயணத்துடன் யூனியன் கல்லூரியில் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளில் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க அவர்கள் உட்பட பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், அதேபோல மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல் ராஜ் மற்றும் கடலற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget