Ads (728x90)

யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தின் பெயர் திருவள்ளுவர் கலாச்சார நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேற்படி பெயர் மாற்ற வைபவம் இன்று யாழ்.  கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. 

இதன் பொழுது புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கிணிடும சுனில் செனவி, கடற்றொழில் நீரியல் வள துறை அமைச்சர் சந்திரசேகரம், இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோர் இணைந்து டிஜிட்டல் திரை மூலம் பெயரை மாற்றம் செய்தனர்.

இந்தியாவின் 1.6 பில்லியன் ரூபாய் நிதிப் பங்களிப்புடன் கடந்த 2023 ஆம் ஆண்டு குறித்த கலாசார மத்திய நிலையம் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget