இதன் பொழுது வேலை வேண்டும் வேலை வேண்டும் பட்டதாரிகளுக்கு வேலை வேண்டும், படித்தும் பரதேசிகளாக இன்றும் தொடரும் அவலம், பல பரீட்சைகளை தொடர்ந்து என்ன பிரியோசனம் என்றவாறு பல கோஷங்களை எழுப்பிய வண்ணம் யாழ். நகரினூடாக ஆளுநர் அலுவலகத்தை சென்றடைந்தனர்.
பின்னர் போராட்டக்காரர்கள் ஆளுநரை சந்திக்க முற்பட்டனர். இருப்பினும் ஆளுநரின் செயலாளர் குறித்த போராட்டக்காரர்களை சந்தித்து நான்கு பேர் மாத்திரம் ஆளுநருடன் பேச முடியும். கோரிக்கை மகஜர் கையளிக்க முடியும் என தெரிவித்தார்.
தமக்கு அரசாங்க வேலை பெற்றுத் தருவேன் என உறுதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் வீதியை மறிக்க முற்பட்டதால் பொலிசாருடன் தர்க்கம் ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து குறித்த சிலரை ஆளுநர் பேசுவதற்கு அழைத்தார்.
போராட்டக்காரர்களைச் சந்தித்த ஆளுநர் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனை நாடு முழுவதும் இருப்பதாகவும், இது தொடர்பான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டு அது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார். இதனை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
Post a Comment