Ads (728x90)

உலகில் எந்த நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பான அக்கறையும், அதன் மீதான தாக்கமும் எமது நாட்டு மக்களுக்கு என்றும் இருக்கும். எமது மக்கள் பண்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதோடு, மாற்றத்தை விரும்பும் ஒரு சமூக அமைப்பாகவும் காணப்படுகிறார்கள். உலகிலேயே அதிக கண் தானம் செய்யும் நாடு என்ன என்று இணையத்தில் நீங்கள் தேடினால் இலங்கையின் பெயர்தான் பதிலாக வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அங்கு நடைபெற்று வரும் சர்வதேச அரச உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு இன்று உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடுகளுக்கிடையிலும், பிராந்தியங்களுக்கு இடையிலும் உலகளாவிய ரீதியாகவும் தாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், இந்த சவால்களுக்கு ஒன்றிணைந்து முகம் கொடுக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாகும் எனவும், வறுமையான நாடுகளில் 60 வீதமான நாடுகள் இன்று கடன் சுமைக்கு உள்ளாகியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச நாடுகளுடன் செய்துக் கொள்ளப்படும் ஒப்பந்தங்களுடன், வளர்ந்துவரும் நாடுகளுக்கு ஏற்ற வகையில் முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும், இலஞ்சம், ஊழல் இல்லாத ஒரு ஆட்சியை நோக்கி தாம் பயணித்துக் கொண்டிருப்பதாகவும், எமது நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டால், எமது நாட்டை சூழவுள்ள கடலை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்த  தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், துப்பாக்கித் தோட்டா மற்றும் விமானத்தில் வெடிக்கும் வெடி குண்டைவிடவும் சமகாலத்தில் சைபர் தாக்குதலால் அதிக அழிவுகள் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன. ஆயுதம் தாங்கிய யுத்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க சர்வதேச ரீதியாக சட்டத்திட்டங்கள் காணப்பட்டாலும், சைபர் யுத்தங்களிலிருந்து மக்களை காக்க எந்தவொரு சட்டமும் கிடையாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனால் சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பலம் வாய்ந்த சட்டக்கட்டமைப்பு ஒன்று அவசியமாகும் எனவும், ஒரு வருடத்திற்கு மேலாக நீடித்த வைரஸ் தாக்குதலால், வல்லரசு நாடுகள் முதல் வறுமையான நாடுகள்வரை பாதிக்கப்பட்டதை நாம் மறந்துவிடக்கூடாது எனவும், இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் பல நோய்கள் பரவ ஆரம்பித்துள்ளன எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் புற்றுநோய் என்பது மனிதனுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது எனவும், உலகலாவிய ரீதியாக மில்லியன் கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு வாழ்வுக்கும், மரணத்திற்கும் இடையில் போராடி வருகிறார்கள் எனவும், தாம் பல்வேறு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், சகோதரத்துவத்துடன் வாழப் பழக வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

உலக காலநிலை பிரச்சினைகள் வறியவர், செல்வந்தர் என்று பாராமல் அனைவரினதும் கதவுகளை தட்டிக்கொண்டிருப்பதாகவும், தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க நாங்கள் உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget