Ads (728x90)

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார மற்றும் முதலீட்டு தொடர்புகளை வலுவூட்டுவதற்கான ஊக்குவிப்பும் மற்றும் நெருங்கிய முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. 

இந்த ஒப்பந்தத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் நிதி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மொஹமட் பின் ஹாட் அல் ஹூசெதி மற்றும் இலங்கை வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் கையொப்பமிட்டனர். 

இந்த இருதரப்பு ஒப்பந்தம், உலக சந்தைகளில் முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்தவும், வௌிநாடுகளில் முதலீடுகளை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கும் சட்ட வரைவொன்றை வழங்கும். 

முதலீட்டாளர் உரிமைகளை பாதுகாக்கவும், பொருளாதார ஒத்துழைப்புக்களை மேம்படுத்தவும் விரிவான முதலீட்டு பாதுகாப்பு, பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறை மற்றும் கொள்கை வரைவு தயாரிப்பாளர்கள் தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் வௌிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான வசதிகளை வழங்குதல் என்பன இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்களாகும். 

இந்த ஒப்பந்தம் உலக பொருளாதார கூட்டிணைவை வலுப்படுத்தும் அதேவேளை இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகளை தேடுவதற்கான வசதிகளையும் வழங்கும். 

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால தொடர்புகளை வலுப்படுத்தி நிலையான முதலீடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் இருநாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் நிதி தொடர்புகளை மேம்படுத்தவும் வழிவகுப்பதாக இந்த ஒப்பந்தம் அமையும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget