Ads (728x90)

நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கான 3ஆவது மீளாய்வு கடன் தவணைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு அங்கீகாரம் அளித்துள்ளது.

334 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மூன்றாவது மீளாய்விற்கான கடன் தவணையை விடுவிப்பதற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

48 மாதங்களுக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தால் இதுவரையான காலப்பகுதிக்குள் இலங்கைக்கு விடுவிக்கப்பட்டுள்ள மொத்த கடன் தொகையின் அளவு 1.34 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய மூன்றாம் கட்ட மீளாய்வினை வெற்றிகரமாக நிறைவு செய்தமையால் நான்காம் கட்ட கடனுதவியாக 334 மில்லியன் டொலர்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. 

இது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் சிறந்த குறிகாட்டியாகுமென தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget