Ads (728x90)

நவீன உபகரணங்கள் மற்றும் வசதிகளுடன் மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளம் இம்மாதம் 26ஆம் திகதி மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

ஆனையிறவு உப்பளத்தின் செயற்பாடுகளுக்கான மதிப்பீட்டுப் பணிகளில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி கலந்து கொண்டிருந்தார்.

இவ்வளவு காலமும் குறைபாடுகளுடன் செயற்பட்ட அரசாங்கத்தின் உப்பு தொழிற்சாலைகளில் உப்பு உற்பத்தியின் போது அயடின் சேர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் வசதிகளுடனான நவீன மயப்படுத்தப்பட்ட இத்தொழிற்சாலை ஊடாக 26ஆம் திகதியில் இருந்து நுகர்விற்காக உப்பு சந்தைக்கு அனுப்பப்படவுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget