Ads (728x90)

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தேசிய ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின் போது அமைச்சர், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட மக்களுக்கு ஊடக நெறிமுறைகள் குறித்து கல்வி கற்பிப்பதற்கான ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

தொலைக்காட்சியின் டிஜிட்டல் மயமாக்கலும் விரைவில் நிறுத்தப்படும் என்றும், இந்த செயல்முறை தாமதமாகி வருகிறது, எனினும் இதனை விரைவில் நிறுத்த விரும்புகிறோம் என்று வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget