Ads (728x90)

வெள்ளை பூண்டில் (உள்ளி) உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.

பூண்டு, பால், தேன் கலவையை தினமும் பருகி வர வயிற்றுக் கடுப்பு குணமாகும். இப்பூண்டுப் பாலை காலையும், இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட்டால் சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். 

ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும். பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும்.

வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏற்பட்டுள்ள வீக்கத்தை சரி செய்துவிடும்.

நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும். பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். நரம்புத் தளர்ச்சி மற்றும் வயோதிகத் தன்மையை நீக்கும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget