Ads (728x90)

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் என்ற சுற்றுலா நகருக்கு அருகே சுற்றுலாப் பயணிகள் குழு மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியதியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றுப் பிற்பகல் 3 மணி அளவில் பைசரன் மலையின் பைன் மரக்காட்டு பகுதியிலிருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன்  இறங்கி வந்தனர். அவர்கள், அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். அதில் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

பயங்கரவாதிகள் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் கர்நாடகா, ஒடிசா, குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் அடங்குவார்கள் என்று கூறப்படுகின்றது. 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் கூறப்படுகின்றது.


Post a Comment

Recent News

Recent Posts Widget