Ads (728x90)

நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சிசபைத் தேர்தல் வாக்களிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆம்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள் தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக தேசிய அடையாள அட்டை அல்லது வாகன அனுமதிப் பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு என்பற்றை வாக்களிக்க வரும்போது எடுத்துவர வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு எதிரே கட்சிகளின் சின்னங்களும் சுயேச்சைக் குழுக்களின் பெயர்களுக்கு எதிரே சுயேச்சைக் குழுக்களின் சின்னங்களும் இருக்கும், அதற்கு எதிராக வெற்றுக்கட்டத்தில் புள்ளடி (X) இடவேண்டும்.

வாக்குச்சீட்டில் எழுதவோ, சித்திரம் கீறவோ, கிறுக்கவோ, எண்ணங்களை எழுதவோ, பெயர்களை எழுதவோ வேண்டாம். அவ்வாறு செய்தால் வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும். புள்ளடி (X) இடப்படாத வாக்குச்சீட்டும் நிராகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget