இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு செயற்பாட்டாளர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த “சஞ்சாரக உதாவ”நாட்டின் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கும், சுற்றுலாத் துறையில் பிரவேசிக்க விரும்பும் எவருக்கும், தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான சந்தை வாய்ப்புகளை அடையாளம் காண ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
250 வர்த்தகக் கூடங்களைக் கொண்ட இந்தக் கண்காட்சி இன்றும், நாளையும் நடைபெறும். இதில் ஹோட்டல்கள், பயண முகவர்கள், விமான நிறுவனங்கள், சுற்றுலா சேவை வழங்குநர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
Post a Comment