Ads (728x90)

ஈரானில் உள்ள போர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் எஸ்ஃபஹான் (Esfahan) ஆகிய மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். 

"ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிப்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதும்” எங்கள் நோக்கமாகும் என அமெரிக்காவின் தாக்குதல் குறித்து டொனால்ட் டிரம்ப் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ளார். 

மத்திய கிழக்கின் மிரட்டலான ஈரான் இப்போது சமாதானத்தை ஏற்க வேண்டும், இல்லையென்றால் எதிர்கால தாக்குதல்கள் மிகப் பெரியதாக இருக்கும்" என்றும் கூறியுள்ளார்.

தாக்குதல்கள் அற்புதமானவை, இராணுவ வெற்றி. ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். 

ஈரானுக்கு 60 நாட்கள் கெடு கொடுத்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், 61வது நாளில் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்க மக்களிடையே உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், உலகத்திலேயே தீவிரவாதத்திற்கு அதிக ஆதரவு அளிக்கும் நாடு ஈரான் எனவும், ஒன்று அமைதி இல்லையேல் அழிவு எனவும் உறுதிப்பட கூறியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget