Ads (728x90)

இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் மொத்தமாக சுமார் 2 தொன் நிறையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

அதற்கமைய இதுவரையான காலப்பகுதியில் 1,253 கிலோகிராம் ஹெராயின், 2,121 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 12,439 கிலோகிராம் கஞ்சா, 22 கிலோகிராம் கொக்கேய்ன், 1.6 மில்லியன் போதை மாத்திரைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

எதிர்வரும் 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.   

இந்த விடயம் தொடர்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget