இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகளோ அல்லது பொருட்சேதங்களோ ஏற்படவில்லை எனவும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை இன்று கட்டார் அல்-உதெய்த் தளத்தின் மீது "வலிமையான மற்றும் அழிவு தரக்கூடிய" ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகவும், இது அமெரிக்காவின் ஈரான் அணு உலை வசதிகள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக இருந்ததாகவும் ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்தன.
ஆறு முதல் பத்து ஏவுகணைகள் வரை இலக்கு வைத்து வீசப்பட்டதாக பல்வேறு அறிக்கைகள் கூறுகின்றன, ஆனால் இவை கட்டாரின் வான்பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலை "கட்டாரின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் பகிரங்க மீறல்" என கட்டார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாஜித் அல்-அன்சாரி கண்டித்துள்ளார். நேரடியாக பதிலடி கொடுக்கும் உரிமையை கட்டார் கொண்டிருப்பதாகவும் அவர் அறிவித்தார்.
மேலும் இந்தத் தாக்குதல் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment