Ads (728x90)

நிதி அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

நிதி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய மஹிந்த சிறிவர்தன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இது தொடர்பான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவிடம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

நிதி அமைச்சின் கீழ் உள்ள இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பணிப்பாளராக பல வருடங்களாக மூலதனச் சந்தையை ஒழுங்குபடுத்துவதில் பங்களித்துள்ளார். 

உலக வங்கியின் இலகுவில் வணிகமயமாக்கல் குறித்த சர்வதேச தரவரிசைப்படி சிறிய அளவிலான முதலீட்டாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் தரவரிசையை 74 ஆவது இடத்திலிருந்து 28 ஆவது இடத்திற்கு உயர்த்துவதற்கும் பங்களித்துள்ளார்.

பணமோசடி தடுப்பு செயலணியின் உறுப்பினராக மூலதனச் சந்தையைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டுள்ளதுடன், சிறிய மற்றும் மத்தியதர தொழில்முயற்சிகளை பட்டியலிடுவதற்கான கொள்கைகள் உட்பட, நிதித்துறையில் தற்போதுள்ள கொள்கைகளை உருவாக்குவதற்கும் அவர் பங்களித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget