இளைஞர்களின் பங்கு மற்றும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு பொறுப்புள்ள இளைஞர் தலைமைத்துவத்தை உருவாக்குவது அவசியம். நீண்ட காலமாக அதிகாரத்தைப் பாதுகாக்கும் குடும்ப தலைமுறைகளின் கைகளில் நாடு இருக்கக் கூடாது. நேர்மை, திறன் மற்றும் திறமையுடன் நாட்டை வழிநடத்தத் தயாராக உள்ள இளைஞர் குழுவை உருவாக்க வேண்டும் என்றும் தேசிய இளைஞர் மாநாட்டின் ஆரம்ப விழாவில் பேசிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இளைஞர்களை அரசியல் கைப்பாவைகளாக மாற்றாமல், நாட்டின் எதிர்காலத்தை வழிநடத்தும் தலைவர்களாக உருவாக்குவதே மாநாட்டின் இலக்காகும் எனவும் அவர் தெரிவித்தார்.தேசிய இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, அரசாங்கத்தை நவீனமயமாக்குவதற்காக சுமார் 62,000 அரச ஊழியர்களை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறினார்.
எங்கள் அரசாங்கம் வேலை வழங்கும் மையம் அல்ல, மாறாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மையமாகும். அரச சேவையானது வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருளாதாரத்தையும் சமூக நிறுவனத்தையும் கட்டமைக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் இடிபாடுகளின் குவியல் போன்று உள்ளது. அதை நவீனமயமாக்க, 62,000 பேரை அரச சேவையில் ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. நாங்கள் மொத்தமாக ஆட்சேர்ப்பு செய்யவில்லை. ஒரு இலட்சம் அல்லது ஒன்றரை இலட்சம் பேரை ஆட்சேர்ப்பு செய்யவும் இல்லை. ஆனால் அரச சேவையைப் பராமரிக்கத் தேவையான 62,000 பேர் நாடு முழுவதும் இனங்காணப்பட்டு அவர்களை விரைவில் சேர்க்க அறிவுறுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment