19 கோரிக்கைகளை முன்வைத்து தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது.
தபால் சேவையில் கைவிரல் ரேகை பதிவு ஸ்கேனர் பொருத்தல் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவில் மாற்றமில்லை என்ற அரசாங்கத்தின் உறுதியான இரண்டு கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்து தபால் சேவையாளர்கள் இன்று மாலையுடன் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளனர் என சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட உடன்பாட்டை அடுத்து, முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

Post a Comment