யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
ஆசியாவின் பெரும் நூலகமான யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டது. இனங்களுக்கு இடையில் கலவரங்களை ஏற்படுத்தி தமிழ் மக்களை கொன்றொழித்தது. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களின் படுகொலைகளுக்கு காரணமாக இருந்தது. பட்டலாந்த சித்திரவதை முகாம்களில் இளைஞர்களை கடுமையாக சித்திரவதை புரிந்து அவர்களை படுகொலை செய்தது. ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகளை கொழும்பு 04 ஆம் மாடியில் சித்திரவதை புரிந்து படுகொலை செய்ய உறுதுணையாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக அவர் எப்போதோ கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டு இருக்க வேண்டியவர்.
இப்போது அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்படும். அத்துடன் ஏனைய குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

Post a Comment