Ads (728x90)

ஒரு பாம்பை காயப்படுத்தி, அதைக் கொல்லாவிட்டால் அது திருப்பித் தாக்கும் என்று முன்னணி சோசலிசக் கட்சி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இராஜதந்திர சமூகத்தின் சில பிரிவுகளின் அழுத்தத்தை மீறி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்வந்ததாக முன்னணி சோசலிசக் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.

இதற்காக அரசாங்கத்தைப் பாராட்டிய அவர், ரணில் விக்கிரமசிங்கவுக்கு  எதிராக அரசாங்கம் எடுக்கும் மேலதிக நடவடிக்கைகளை தமது கட்சி  ஆதரிக்கும் என்றார்.

ரணில் விக்கிரமசிங்க ஓர் ஆபத்தான நபர். படலந்த சித்திரவதைக் கூடத்தை நடத்திய குற்றச்சாட்டுகளால் கறைபட்டவர் என்று நாகமுவ கூறினார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget