Ads (728x90)

நேற்றிரவு நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ணத் தொடரின் 10 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

எமிரேட்ஸுக்கு எதிரான பாகிஸ்தானின் இந்த வெற்றி குழு A இல் முதல் இரண்டு அணிகளுக்குள் இடம்பிடித்து சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகுளை இழந்து 146 ஓட்டங்கள‍ை பெற்றது.

பாகிஸ்தான் அணி பகர் ஜமான் 36 பந்துகளில் 50 ஓட்டங்களையும், ஷாஹீன் ஷா அப்ரிடி 14 பந்துகளில் 29 ஓட்டங்களையும் எடுத்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் சித்திக் நான்கு ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர் சிம்ரன்ஜீத் சிங் நான்கு ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எமிரேட்ஸ் அணி, 17.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

எமிரேட்ஸ் அணி சார்பில் அதிகபடியாக ராகுல் சோப்ரா 35 ஓட்டங்களை அதிகபடியாக எடுத்தார். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணிக்காக ஷாஹீன், அப்ரார் அகமட் மற்றும் ஹாரிஸ் ரவூப் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget