Ads (728x90)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட இருதயவியல் பிரிவு கட்டிடம் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களின் பங்கேற்புடன் இன்று பொதுமக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கணேசமூர்த்தி கலாரஞ்சனியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

324 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டடத் தொகுதியின் திறப்பு விழா நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்ணசேகர, பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்கள், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget