தற்போதைய அரசாங்கம் எரிசக்தித்துறையின் இறையாண்மையைப் பாதுகாத்து பொருளாதார இறையாண்மையை உருவாக்க பாடுபடுவதாகவும், அந்த முற்போக்கான மாற்றத்திற்காக அனைத்து மக்களின் ஆதரவையும் கோருவதாகவும் அங்கு உரையாற்றய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொலன்னாவை பெற்றோலிய களஞ்சிய வளாகத்தில் 15,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று தாங்கிகள், 7,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு தாங்கிகள் மற்றும் கொலன்னாவை பெற்றோலிய சேமிப்பு வளாகத்தில் 5,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தாங்கி உள்ளிட்ட ஆறு களஞ்சிய தாங்கிகளின் நிர்மாணப் பணிகள் இவ்வாறு தொடங்கப்பட்டது.கொலன்னாவை எரிபொருள் களஞ்சிய வளாகத்தில் ஆறு எரிபொருள் சேமிப்பு தாங்கிகளை நிர்மாணிப்பதற்காக M/s Indo East Engineering - Ceylex Engineering JV-க்கு நிறுவனத்திற்கு 3.7 பில்லியன் ரூபா மொத்த செலவில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த காலம் 24 மாதங்களாக உள்ளதுடன் 2027 செப்டெம்பர் மாதத்தில் இந்த திட்டத்தை நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மக்களின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. தற்போதைய அரசாங்கம் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
எரிபொருள், எரிவாயு இல்லாமல் மக்கள் வரிசையில் நின்று இறந்தது போன்ற ஒரு நெருக்கடி இலங்கையில் மீண்டும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை.
எந்தவொரு தொழிற்சங்கமும் அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டத்தைத் தடுத்தால், அது தொடர்பில் முடிவு எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம். ஒரு நிறுவனம் பழமைவாத மரபுகளுடன் முன்னேற முடியாது. அதேபோல் ஒரு நிறுவனம் மனித உழைப்பை மட்டும் கொண்டு முன்னேறாது.
ஒரு நிறுவனம் முன்னேற வேண்டுமென்றால் தொழில்நுட்பமும், அறிவியலும் இணைக்கப்பட வேண்டும். தொழில்நுட்பம் அல்லது அறிவியலுக்கு பயப்படும் எந்த நிறுவனமும் வளர்ச்சியடையாது.
பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் நவீனமயமாக்கலுக்கு ஈரானியத் தலைவர் வந்து அடிக்கல் நாட்டினார். ஆனால் உரிய காலத்தில் அந்தப் பணி நடைபெறவில்லை. இதன் காரணமாக, மின்சாரக் கட்டணம் கூட மேலதிக சுமையாக மாறியுள்ளது.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே மின்சார சபையை தனியார் மயமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது வலுசக்தி இறையாண்மையைப் பாதிக்கும் என்பதை நாங்கள் கண்டோம். அந்தச் சட்டத்தை மாற்றியது ஒரு குற்றமா? மின்சார சபை ஊழியர்கள் சட்டப்படி வேலை செய்தல் அல்லது சுகயீன விடுமுறை எடுப்பது இதனால்தானா? அவர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தெரிவு செய்யப் பாதைகள் உள்ளன.
தொழில்நுட்பத்திற்கு பயப்படும் அல்லது புதிதாக ஏதாவது மேற்கொள்ள அஞ்சும் நாடு முன்னேறாது. எனவே நிறுவனங்களை இயந்திரமயமாக்கலுக்கு உட்படுத்த வேண்டும். நிறுவனங்கள் இயந்திரமயமாக்கப்பட்டாலும், நாம் இயந்திரத்தனமானவர்கள் அல்ல. நாம் நெகிழ்ச்சியான மக்கள்.
எனவே நிறுவனங்கள் இயந்திரமயமாக்கப்படும்போது ஊழியர்களுக்கு என்ன நடக்கும் என்பதை நாங்கள் நன்கு புரிந்துகொண்டு அதற்கு தீர்வுகளை வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.
Post a Comment