Ads (728x90)

அரசாங்கம் அரசியல் சார்புf கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 704 ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

தற்போது வழங்கப்படும் அனைத்து நியமனங்களும் கட்சி அல்லது இனத்தை விட சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். கடந்த அரசாங்கங்கள் அரச நிறுவனங்களை அரசியல்மயமாக்கி, அரசியல் ஆட்சேர்ப்பு மூலம் அரச நிதியை வீணடித்தன.

கடந்த வருடம் செப்டம்பர் 21 ஆம் திகதி மக்கள் அளித்த ஆணை நாட்டை ஒரு புதிய பாதையில் பயணிக்க செய்துள்ளது. ஊழல் நிறைந்த சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. சமத்துவம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு உறுதியளித்துள்ள அரசாங்கம் உருவாகியுள்ளது. அரசாங்கம் தொழில் பாதுகாப்பை உறுதி செய்யும். 

குடிமக்கள் நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து கூட்டு முன்னேற்றத்துக்கு பங்களிக்க வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget