ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலக குழுக்கள் தனித்தனியாக செயற்படவில்லை எனவும், அவை அரசியலால் வளர்க்கப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தற்போது நெருக்கடி ஏற்பட்ட நிலையில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதாள உலகக் குழுவினரைத் தேடும்போது அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் மறைந்து கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும், முன்னாள் அமைச்சராக இருந்தாலும், சட்டம் அனைவருக்கும் சமமானது. எனவே சட்டம் தனது கடமையைச் செய்யும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

Post a Comment