Ads (728x90)

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளல், நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்துதல்  என்பவற்றுக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் நேற்றைய தொடக்க அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தில் கருத்துரைத்த போது இந்தியப் பிரதிநிதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சகலரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget