Ads (728x90)

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் (நீக்குதல்) சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 151 பேர் வாக்களித்ததனர். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மாத்திரம் எதிர்த்து வாக்களித்தார்.

இதனிடையே ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் (நீக்குதல்) சட்டமூலத்தின் எந்தவொரு விதியும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணானது அல்ல என்றும் நாடாளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமெனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் நேற்று நாடாளுமன்றில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget