முன்னதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை கட்டணத் திட்டத்தை இரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் திகதியன்று ஏற்பட்ட கலவரத்தின் போது வீடுகளை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு வருடத்திற்கு வாடகை அடிப்படையில் குறித்த வீடமைப்பு திட்டத்தில் இருந்து 101 வீட்டு அலகுகளை வழங்க 2022 ஆம் ஆண்டு அமைச்சரவை முதலில் ஒப்புதல் அளித்தது.
பின்னர் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, இந்த அலகுகளை குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
இருப்பினும் இந்தத் திட்டத்தின் காரணமாக ரூபா 92.126 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த வீடுகளுக்காக முற்பணம் செலுத்திய 29 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விபரம்:
பிரசன்ன ரணதுங்க, அலிசப்ரி ரஹீம், சமிந்த சம்பத், பிரேமநாத் தொலவத்த, சுமித் உடுகும்புர, சஹான் பிரதீப், சிந்தக அமல் மாயாதுன்ன, மிலன் ஜயதிலக்க, அசோக பிரியந்த, லலித் வர்ணகுமார, ஜானக திஸ்ஸகுட்டி ஆராச்சி, அஜித் ராஜபக்ஷ, எச்.எம்.டி.பி. ஹேரத், எஸ்.எம்.எம். முஷாரப், குமாரசிறி ரத்நாயக்க, பி.ஏ.கே. அத்துகோரள, ஷெஹான் சேமசிங்க, குலசிங்கம் திலீபன், நிமல் பியதிஸ்ஸ, காமினி வலேபொட, மொஹமட் முஸம்மில், எஸ்.எம். சந்திரசேன, அசங்க நவரத்ன, காமினி லொகுகே, மஹிந்த யாப்பா அபேவர்தன, பியல் நிஷாந்த, டி வீரசிங்க, சாந்த பண்டார, அருந்திக பெர்னாண்டோ.

Post a Comment