Ads (728x90)

உலகின் எந்த நாட்டோடும் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் வெறும் காகிதங்கள், வார்த்தைகளுக்கு மட்டுப்படுத்தப்படாமல் அவற்றின் மூலம் நாட்டு மக்களுக்கு பிரதிபலன்களை பெற்றுக் கொள்ளும் நிலைமைகள் ஏற்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற  இலங்கை குடியரசுக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான முதலீடுகள், பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளை பொறுத்தவரையில் ஐக்கிய அரபு இராச்சியம் எமக்கு மிக முக்கியமானதாகும் என்பதுடன் பல தசாப்த காலங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்புகள் காணப்படுகின்றன. இலங்கையர்கள் மூன்று இலட்சம் பேர் அந்த நாட்டில் வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் இத்தகைய ஒப்பந்தங்கள் மூலம் எமது வர்த்தக தொடர்புகள் பலம் பெறுவதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவடையும். எமது நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இத்தகைய உடன்படிக்கைகள் மூலம் முடியும். மேலும் உடன்படிக்கைகளை கைச்சாத்திடவும் முடியும் என்பதுடன் இதற்கு முன்னரும் 27 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. 

எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தாலும் அரசாங்கம் என்ற வகையில் போதைப்பொருள் கொள்கலன் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

நாம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்தது போன்று நாட்டிலிருந்து போதைப் பொருள் வர்த்தகத்தை முற்றாக நிறுத்துவோம். இளைய தலைமுறையினரை பாதுகாப்போம் என்ற வாக்குறுதியை நாம் நிறைவேற்றுவோம்.  நாட்டை அழிவுக்கு உட்படுத்தும் அனைத்தையும் நாம் இல்லாதொழிப்போம் என்றார்.

போதைப்பொருள் கொள்கலன் எங்கிருந்தது? எவ்வாறு வந்தது என எவ்வித அறிவித்தலையும் அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் அது பற்றி நாடாளுமன்றத்தில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

எனினும் இதன் பின்னணியிலுள்ள ஆபத்து மற்றும் அபாயகரம் பற்றி எவரும் கருத்து தெரிவிப்பதில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் தங்களது தரப்பினர் சந்திக்கும் ஒவ்வொரு தாய்மாரும் இந்த போதைப்பொருள் வியாபாரத்தை ஒழிக்குமாறும், தங்களுடைய பிள்ளைகளை இந்த போதைப்பொருள் கலாசாரத்தில் இருந்து மீட்டுத்தருமாறும் தம்மிடம் கோரிக்கை விடுப்பதாகப் பிரதமர் தெரிவித்தார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget