குறிப்பாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அரச சேவை மூலம் பொதுமக்களுக்கு மிக விரைவாக சேவைகளை வழங்குவதும், மக்கள் நேய அரச சேவையை உருவாக்குவதும் எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்..
செப்டம்பர் 29 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற, முகாமைத்துவ சேவையின் தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று, நேர்முகப் பரீட்சைகள் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ள 1,890 உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உயர்தரத் தகைமைகளின் அடிப்படையில் போட்டிப் பரீட்சையின் மூலம் ஒரே தடவையில் அரச சேவையில் சேர்க்கப்படும் மிகப்பெரிய குழு இதுவென்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment