Ads (728x90)

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தரைப்பகுதியில் அதிக தொகையான ஐஸ் போதைப்பொருள் தங்காலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

தங்காலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதலின் போது, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களும், விற்பனையாளர்களும், அதன் பின்னணியிலிருந்து செயற்படுவோருக்கும் மகிழ்ச்சியடைய முடியாததொரு சூழலை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்கு எதிராக எடுக்கக் கூடிய சகல நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளளோம்.

இதற்கு முன்னர் மாத்தறையில் கைப்பற்றப்பட்ட 394 கிலோகிராம் போதைப்பொருளே இன்றுவரை தரைவழி சோதனையில் சிக்கிய அதிக தொகையான போதைப்பொருளாக இருந்தது.

இதன்பின்னர் முதல் முறையாக தரைவழி சோதனையில் இன்று 635 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை வெற்றிகரமான போதைப்பொருள் சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், போதைப்பொருட்கள் தொடர்பில் பயனுள்ள தகவல்களை வழங்கும் பொதுமக்களுக்கு காவல்துறையினால் வெகுமதிகளும் வழங்கப்படும் எனவும் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget